LATEST NEWS
மருத்துவமனை பிணவறையில் கொடூரம்…! இறந்த பெண்களின் ஆடைகளை அகற்றி வீடியோ எடுத்த வக்கிர ஊழியர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பிரிம்ஸ் (BRIMS) அரசு மருத்துவமனை பிணவறையில் முனிர் அகமது என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு வரப்படும் இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களின் ஆடைகளைக் களைந்து, அவர்களைத் தனது கைபேசியில் ஆபாசமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ரசிக்கும் வக்கிர புத்தியைக் கொண்டிருந்தார்.
இவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர் இதைக் கண்டித்தும் முனிர் அகமது தனது கொடூரச் செயலை நிறுத்தவில்லை. இதனால் சந்தேகமடைந்த அந்த ஊழியர், பிணவறை மருத்துவரிடம் உண்மையை உடைத்தார். உடனே சம்பந்தப்பட்ட நபரின் அலைபேசியை வாங்கிச் சோதித்த மருத்துவர், அதில் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்த இறந்த பெண்களின் ஆபாசப் பதிவுகளைக் கண்டு, உடனடியாக மருத்துவமனை டீன் மூலமாகக் காவல்துறையில் புகார் அளித்தார்.
விவகாரம் வெளியே தெரிந்ததும் தப்பியோடிய முனிர் அகமதுவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, இச்சம்பவம் குறித்துத் தீவிரமாகக் கண்டனம் தெரிவித்துள்ள மகளிர் ஆணையத்தினர், பெண்கள் உயிருடன் இருக்கும்போது மட்டுமின்றி இறந்த பிறகும் நிம்மதியாக இருக்க முடியாத அவலம் நேர்ந்துள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த வக்கிர செயலில் ஈடுபட்ட நபர் மீது மிகக் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகளை விரைந்து எடுத்து, அது குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் பலத்த ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
