LATEST NEWS
இதற்காக தான் போனார்களா..! லண்டனியில் இன்பநிதியின் சாதனை… பங்கேற்க சென்ற ஸ்டாலின் குடும்பம்.. விமானநிலையத்தில் பரபரப்பு..!!
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தனது பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 4-ஆம் தேதி தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் லண்டன் சென்றார். மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் இன்பநிதி தனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதே இவர்களின் இந்த லண்டன் பயணத்திற்கான முக்கியக் காரணமாகும்.
இந்த மகிழ்ச்சியான குடும்ப நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது குடும்பத்தினருடன் இன்று திடீரென லண்டனுக்குப் புறப்பட்டார். அவருடன் மொத்தம் 10 குடும்ப உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை 9.50 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் புறப்பட்ட அவர்கள், துபாய் வழியாக லண்டனைச் சென்றடைந்தனர்.
லண்டன் புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினருக்கு, சென்னை விமான நிலையத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் நேரில் வந்து வழியனுப்பி வைத்தனர். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழா மற்றும் இதர குடும்பக் கொண்டாட்டங்கள் அனைத்தையும் முடித்துக்கொண்டு, மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் குடும்பத்தினர் வருகிற 18-ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
