CRIME
“ஆமா.. நான் 6 பேரைக் கொலை செஞ்சுட்டேன்!”.. அடுத்தடுத்து விழுந்த அரிவாள் வெட்டு… ஜாமீனில் வந்து ரத்த வெறியாட்டம் நடத்திய குற்றவாளி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த மே மாதம், 17 வயது மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானார். தன்னைச் சிறைக்கு அனுப்பிய சிறுமியின் குடும்பத்தின் மீது அவர் வன்மத்துடனும், கடுமையான ஆத்திரத்துடனும் பழிவாங்கும் நோக்கில் இருந்துள்ளார். இதன் காரணமாக, இன்று அதிகாலையில் அச்சிறுமியின் வீட்டிற்குச் சென்ற ராஜ்குமார், அங்கிருந்த சிறுமியின் பாட்டி ருக்கம்மா (65) மற்றும் தாய் சித்யால லட்சுமி (45) ஆகியோரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். தொடர்ந்து, அந்த மைனர் சிறுமியை அருகில் உள்ள வயல்வெளிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு தனது வீட்டிற்குச் சென்ற ராஜ்குமார், ஆத்திரம் அடங்காமல் தன் மனைவி பார்வதி சரிதா மற்றும் அவரது குழந்தைகளான பரீக்ஷித் (3), தைவிக்ஷித் (2) ஆகியோரையும் வெட்டிக்கொலை செய்தார். பின்னர் தனது பெற்றோரைக் கூட்டு, தான் மொத்தம் 6 பேரைக் கொலை செய்துவிட்டதாகவும், தானும் சாகப்போவதாகவும் கூறிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த 6 பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போக்சோ வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்த நபர், பழிவாங்கும் நோக்கில் ஒரே நாளில் குழந்தைகள் உட்பட 6 பேரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
