திடீர் டுவிஸ்ட்..! பாஜகவை வீழ்த்த திமுக – தவெக கூட்டணி.? சிபிஐ வீரபாண்டியன் அதிரடி ஆதரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீர் டுவிஸ்ட்..! பாஜகவை வீழ்த்த திமுக – தவெக கூட்டணி.? சிபிஐ வீரபாண்டியன் அதிரடி ஆதரவு..!!

Published

on

பாஜகவை வீழ்த்த திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தருமபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வகுப்புவாத மற்றும் மதவாத சக்திகளை வீழ்த்துவதற்காக தவெக மற்றும் திமுக ஒரே அணியில் திரள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ள கருத்து முற்றிலும் ஏற்புடையதே என்று தெரிவித்தார்.

மேலும், அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்றோ அல்லது வெவ்வேறு அணிகளிலோ போட்டி போடுவது என்பது வேறு விஷயம், ஆனால் பாஜக போன்ற மதவாத சக்திகளை எதிர்த்து நிற்பது என்பது வேறு விஷயம் என்று வீரபாண்டியன் விளக்கம் அளித்தார். தற்போதைய அரசியல் சூழலில் நாட்டில் உள்ள வகுப்புவாத சக்திகளை வேரறுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in