LATEST NEWS
“வெள்ளத்துல படகு வாங்க காசு இல்லையா..? கவலைப்படாதீங்க.. இந்த ‘ஸ்பாஞ்ச்’ வித்தையை கத்துக்குங்க..!” இணையத்தை ஆச்சரியப்படுத்திய நபரின் வைரல் வீடியோ..!!
சமீப நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்கள் மற்றும் கிராமங்களின் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் பைக்குகளும் கார்களும் தண்ணீரில் சிக்கிக் கொண்டன, பாதசாரிகளும் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர். ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையைக்கூட சிலர் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, தண்ணீரில் நீந்துவது, நண்பர்களுடன் சேர்ந்து மழையை ரசிப்பது என மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்கத் தொடங்கினர்.
அதேபோல, தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர் வெள்ளநீரில் செய்த வேடிக்கையான காரியம் மக்களைப் பெருமளவில் சிரிக்க வைத்துள்ளது. சாலையில் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தபோது, அந்த நபர் எங்கிருந்தோ ஒரு பெரிய ‘போம்’ ஒன்றைக் கொண்டு வந்தார். அதை அப்படியே தண்ணீரில் மிதக்கவிட்டு, அதன் மீது எவ்வித பயமும் இன்றி மிகவும் நிதானமாகப் படுத்துக்கொண்டார். நீரின் ஓட்டம் அவரை மெதுவாக முன்னோக்கி அடித்துச் செல்ல, அவர் ஏதோ ஒரு நதியில் படகு சவாரி செய்வது போல ரசித்து மிதந்து சென்றார்.
https://www.youtube.com/channel/UCetzerTKhS1fOY89ooAQyHg
இந்த விசித்திரமான காட்சியைக் கண்ட அங்கிருந்த மக்கள் ஆச்சரியமடைந்து, தங்களது மொபைல் போன்களை எடுத்து இந்த வேடிக்கையான தருணத்தைப் பதிவு செய்யத் தொடங்கினர். பலரும் அவரது சமயோசித புத்தியையும் குறும்புத்தனத்தையும் பார்த்து சிரிக்கத் தொடங்கினர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் shiv.97__ என்ற கணக்கில் பகிரப்பட்டு, தற்சமயம் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் தங்களின் நகைச்சுவையான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
