“மிசாவில் ஸ்டாலின் தாடை உடைப்பு”.. என் மனசே ஒருமாதிரி ஆகிடுச்சு.. கண்ணீர் விட்டு கதறியழுத பிக்பாஸ் ஜூலி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மிசாவில் ஸ்டாலின் தாடை உடைப்பு”.. என் மனசே ஒருமாதிரி ஆகிடுச்சு.. கண்ணீர் விட்டு கதறியழுத பிக்பாஸ் ஜூலி…!!

Published

on

நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் மிசா சிறைவாசம் குறித்து முதலமைச்சர் விஜய் கேலி செய்யும் வகையில் பேசிய உடல்மொழி செய்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், மிசா காலத்துச் சிறைக்கொடுமைகளையும், போலீசார் தாக்கியதில் தனது தாடை உடைந்த வரலாற்றையும் உருக்கமாக விவரித்ததோடு, யாரைப் பற்றிப் பேசினாலும் கண்ணியத்துடன் பேசுங்கள் என முதலமைச்சருக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.

மு.க.ஸ்டாலினின் இந்த உருக்கமான வீடியோவைப் பார்த்த பிக்பாஸ் புகழ் ஜூலி, மிகுந்த மனவேதனையுடன் கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “காலையில் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவை பார்த்து என் மனசே ஒரு மாதிரி ஆகிவிட்டது; ஒரு மனிதர் தான் பட்ட கஷ்டங்களையும், தாடை உடைக்கப்பட்டதையும் விவரிக்கும் போது அதை எகத்தாளம் செய்வது நியாயமில்லை” என்று அவர் தனது வீடியோவில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், மக்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஆதரவாக இருக்கலாம், ஆனால் வரலாற்றில் நமக்காகப் போராடியவர்களின் மாண்பைக் குறைத்து மதிப்பிட்டு கேலி செய்யக் கூடாது என்று ஜூலி வலியுறுத்தியுள்ளார். அரசியல் விமர்சனங்கள் செய்ய உரிமை இருந்தாலும், மிசா காலத்தில் அவர்கள் அனுபவித்த துயரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்ய வேண்டாம் என்றும், “காலையிலேயே தலைவரை அழ வைத்துவிட்டீர்களே” என்றும் அவர் கண்ணீருடன் தவெக மற்றும் நெட்டிசன்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in