விஜய் ஜெயிச்ச உடனே தனுஷுக்கு ஆசை வந்துடுச்சா…தனுஷின் அரசியல் என்ட்ரி பற்றி தந்தை கஸ்தூரி ராஜா சொன்ன ஷாக் நியூஸ்…”பூமர் தத்துவங்கள்.. .அனுதாப கதைகள்… தனுஷை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்!…” – cinefeeds
Connect with us

CINEMA

விஜய் ஜெயிச்ச உடனே தனுஷுக்கு ஆசை வந்துடுச்சா…தனுஷின் அரசியல் என்ட்ரி பற்றி தந்தை கஸ்தூரி ராஜா சொன்ன ஷாக் நியூஸ்…”பூமர் தத்துவங்கள்.. .அனுதாப கதைகள்… தனுஷை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்!…”

Published

on

இந்திய அளவில் புகழ்பெற்ற இருமுறை தேசிய விருது வென்ற நடிகரான தனுஷ், தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்மூட்டி, சாய் பல்லவி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இப்படம் ‘அமரன்’ பாணியில் தனுஷுக்கு ஒரு மெகா ஹிட் வெற்றியைத் தேடித்தரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில், தனுஷ் கடைசியாக விக்னேஷ் ராஜா இயக்கத்தில் பெரும் நம்பிக்கையுடன் நடித்த ‘கர’ திரைப்படம் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியது. எனவே, தமிழ் சினிமாவின் டாப் டயர் ஹீரோக்களில் ஒருவராகத் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள தனுஷுக்கு இப்போது ஒரு தரமான கமர்ஷியல் ஹிட் மிகவும் தேவையாக இருக்கிறது.

இப்படியொரு சூழலில், தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; என் மகன்களோ, பேரன்களோ கூட அரசியலுக்கு வரலாம்” என்று கூறி தனுஷின் அரசியல் வருகை குறித்த விவாதத்தை தொடங்கி வைத்தார். இந்த விவகாரம் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிய நிலையில், பிரபல சர்ச்சை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தனுஷை வம்புக்கு இழுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அந்த ட்வீட்டில் ப்ளூ சட்டை மாறன், “சில ஆண்டுகளாக வெள்ளை வேட்டி, சட்டை, ருத்திராட்சை கொட்டை, ப்ரோமோ மேடைகளில் பூமர் தத்துவங்கள், அனுதாபம் தேடும் சென்ட்டிமென்ட் கதைகள் என அரசியலுக்கு தயாராகிவிட்டார் சுள்ளான். இப்போது விஜய் வென்றதால் அடுத்து மக்கள் தன்னையும் முதல்வர் ஆக்குவார்கள் என நம்புகிறார்” என்று தனுஷின் மேடைப் பேச்சுகளையும், அவரது தந்தை கூற்றையும் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளார். சமீபகாலமாகத் தனுஷ் தனது பட விழாக்களில் ரஜினியின் பாடி லாங்குவேஜை பின்பற்றி தத்துவார்த்தமாகப் பேசுவதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறனின் இந்த அதிரடி விமர்சனம் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in