CINEMA
எனக்கு ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்க அண்ணே…. பிரபலத்திடம் கெஞ்சிய வடிவேலு….!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. இவர் தன்னுடைய காமெடியால் தன்னை தானே தாழ்த்திக் கொண்டு மக்களை சிரிக்க வைப்பார். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் . இதற்கிடையில்சில பிரச்சனையால் சமீப காலமாகவே எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்து மாமன்னன், சந்திரமுகி இரண்டு ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது சில படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள லொள்ளு சபா சாமிநாதன், ராஜ்கிரன் ஆபீசில் ஆபீஸ் பாயாக வடிவேலு இருப்பார். அப்போதெல்லாம் நான் அங்கு போகும்போது, அவர் அண்ணே எனக்கு ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்க அண்ணே என்று தான் கேட்பார் . அதன் பிறகு தான் படிப்படியாக வளர்ந்து விட்டார். சூட்டிங் ஸ்பாட்டில் நான் டயலாக் பேசுவதற்கு முன்பாக என்னிடம் வந்து அவர் என்னங்க டயலாக் எல்லாம் பாத்துட்டீங்களா என்று கேட்பார். நானும் ஆமாம் என்று சொல்வேன் என்று பேசியுள்ளார்.