CINEMA
இதுதான் சரியான வழி…. செம்பருத்தி டீ சர்ச்சைக்கு ஒரே அடியாய் முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவிற்குள் வந்த ஆரம்ப காலங்களில் சில பல பிரபலங்களோடு சர்ச்சையில் சிக்கினாலும் தற்போது சந்தோஷமாக குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவர் வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது எல்லாம் சரியாகிவிட்டது. இந்த நிலையில் இவருடைய வெற்றிக்கு எப்போதும் தன்னுடைய கணவர்தான் காரணம் என்று மேடைகளில் மகிழ்ச்சியாக கூறியும் வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்பருத்தி டீயில் இருக்கும் பலன்கள் குறித்து பதிவிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு அவருடைய ரசிகர்கள் நேர்மறையான கருத்துக்களையும் எதிர்மறையான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தனர். இப்படி ஒரு சமயத்தில் செம்பருத்தி டீ குடிப்பதால் சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் ஆண்களின் விதைப்பை பாதிப்பு போன்ற நோய்கள் வரும் என்று எக்ஸ் தளத்தில் மருத்துவர் ஒருவர் விமர்சனம் செய்திருந்தார். இதனால் சமூக வலைதளத்தில் அதிகமான வாதங்கள் எழுந்தது. இதனை அடுத்து நயன்தாரா செம்பருத்தி டீ சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அவருடைய பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீக்கி உள்ளார்.