LATEST NEWS
குறைந்த வாக்குகளுடன் இருக்கும் போட்டியாளர்….. இந்த வாரம் எலிமினேஷன் இவர்தானா?….. வெளிவந்த ரிசல்ட்…!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த சீசன்களை காட்டிலும், இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் சென்று வருகின்றது. இந்த நிகழ்ச்சிக்காக பல சீரியல்களை முடித்து விட்டார்கள். அது ரசிகர்களுக்கு சற்று வருத்தம். 100 நாள் ஓடக்கூடிய இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் யார் வெற்றியாளர் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால் தற்போது சண்டைகள் ,பிரச்சனைகள் பிக் பாஸ் வீட்டில் நிரம்பி வருகின்றது. வாரம், வாரம் எலிமினேஷன் யார் ஆவார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் . இப்போது கடைசியில் நான்கு போட்டியாளர்கள் குறைவான வாக்குகளுடன் உள்ளனர் அவர்கள் யார் என்றால் ஷெரினா, ஷிவின் , மகேஸ்வரி, மற்றும் சாந்தி, இவர்கள்தான் கடைசியாக உள்ளனர். இதனால் சாந்தி வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
