உனக்கு அம்மாவாக இருப்பது சவாலானது….! குழந்தை பற்றி நெகிழ்ச்சியாக பகிர்ந்த காஜல் அகர்வால்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

உனக்கு அம்மாவாக இருப்பது சவாலானது….! குழந்தை பற்றி நெகிழ்ச்சியாக பகிர்ந்த காஜல் அகர்வால்….!!!!

Published

on

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழில் நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் . இவர் அதன் பிறகு மாற்றான், துப்பாக்கி ,மாரி  உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னனி  நடிகர்களுடன் நடித்துள்ளார் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சனூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது .

இவர் தனது மகன் குறித்து பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதில் இந்த ஆறு மாதங்கள் எப்படி இவ்வளவு வேகமாக போனது என்று தெரியவில்லை, பயந்து கொண்டு இருந்த இளம் பெண்ணாக நான் இருந்ததிலிருந்து அம்மாவாக நான் மாறிய பிறகு நான் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். நான் என்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அம்மாவாக கவனிப்பு, அன்பு ,உணவு போன்றவற்றை சரியாக கொடுக்கிறேனா என்பது நிச்சயம் எனக்கு மிகுந்த சவாலான ஒன்று.

Advertisement

உனக்கு தேவையான எல்லாவற்றையும் நான் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இப்போது நீ புரண்டு படுகிறாய் நகருகிறாய் இதெல்லாம் ஏதோ ஒரு இரவில் நடந்தது போல உள்ளது. உனக்கு வந்த முதல் ஜலதோஷம், நெற்றியில் வந்த முதல் கட்டி, நீச்சல் குளம் ,கடலில் நீ குளித்தது, உணவுகளை ருசித்தது ,என்று சீக்கிரம் மகன் நடந்து விட்டது. இப்படியே போனால் நீ அடுத்த வாரத்தில் கல்லூரிக்கு கூட போய் விடுவாய் என நானும் உன் அப்பாவும் பேசி சிரித்து கொண்டிருந்தோம். நீ எங்களை எந்த அளவிற்கு பொறுப்புள்ளவர்களாக மாற்றி இருக்கிறாய். கடவுள் தான் உன் மூலம் எங்களை ஆசீர்வதித்து இருக்கிறார் என்று பதிவு பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in