CRIME
“அம்மா நான் உயிரோடுதான் இருக்கேன்…” இறந்துட்டான்னு சொல்லி காரியம் பண்ணியாச்சு… ஆனா3 வருடம் கழித்து நடந்த மிராக்கிள்.. உறைந்துபோன பெற்றோர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், இறந்துவிட்டதாகக் கருதி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட 30 வயது மகள், 3 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட நெஞ்சை நெகிழ வைக்கும் விசித்திரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரயாக்ராஜின் லால் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பிரீதி என்ற பெண் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் காணாமல் போயிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம் ஒன்றை தங்களது மகள் தான் எனத் தவறாக அடையாளம் காட்டிய குடும்பத்தினர், அதற்கு இறுதிச் சடங்குகளையும் செய்து முடித்துள்ளனர். ஆனால், அந்த உடலின் டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பாகவே, குஜராத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் பிரீதி பத்திரமாக இருப்பதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
வீடியோ கால் மூலம் தனது மகள் உயிருடன் இருப்பதை நேரில் பார்த்த தாய், “அம்மா, நான் உயிரோடுதான் இருக்கிறேன்…” என்று பிரீதி கூறியதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினார். இறந்துவிட்டதாக நினைத்த மகள் உயிருடன் மீட்கப்பட்டதால் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் காவல்துறையினருக்குப் பெரும் குழப்பத்தையும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளது. பிரீதி என நினைத்துக் குடும்பத்தினரால் எரிக்கப்பட்ட அந்த முதலாவது அடையாளம் தெரியாத சடலம் யாருடையது மற்றும் அவர் எப்படிக் இறந்தார் என்பது குறித்து பிரயாக்ராஜ் போலீசார் தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
