அடுத்தடுத்து எழும் சிக்கல்… சாட்டை துரைமுருகன் மீது FIR பதிவு… விரைவில் அதிரடி விசாரணை…. பின்னணி என்ன..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்தடுத்து எழும் சிக்கல்… சாட்டை துரைமுருகன் மீது FIR பதிவு… விரைவில் அதிரடி விசாரணை…. பின்னணி என்ன..?!

Published

on

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது பரங்கிமலை காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மீனாட்சி என்பவர் குறித்து, அவர் தவெக ஆதரவாளர் எனத் துரைமுருகன் வதந்தி பரப்புவதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பரங்கிமலை போலீசார் இந்த வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் சாட்டை துரைமுருகனை நேரில் அழைத்து விசாரணை நடத்தப் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in