CINEMA
பிரபல தெலுங்கு நடிகரோடு கைகோர்க்கும் நடிகை த்ரிஷா….? வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகர் திரிஷா. 40 வயது ஆனாலும் தற்போதும் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருந்து வருகிறார். சமீபத்தில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கிய சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விரைவில் “பிரபாஸ் ஸ்பிரிட்” எனும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இதில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் இன்னொரு ஹீரோயினாக த்ரிஷாவை நடிக்க வைக்க அவரோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 300 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் இன் 25-வது படம் உருவாக இருக்கிறது. பிரபாஸ் த்ரிஷா முன்னதாக வர்ஷம், பௌர்ணமி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.