“எங்களை கேவலமா பேசுறாங்க ஐயா” அமைச்சரிடம் கதறிய பெண்… பதறிப்போய் தடுத்து நிறுத்திய வன்னி அரசு.. சோசியல் மீடியாவில் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்களை கேவலமா பேசுறாங்க ஐயா” அமைச்சரிடம் கதறிய பெண்… பதறிப்போய் தடுத்து நிறுத்திய வன்னி அரசு.. சோசியல் மீடியாவில் வைரல் வீடியோ..!!

Published

on

சென்னையில் வீட்டுமனைப் பட்டா கோரிப் போராடி வரும் இருளர் சமூக மக்களை நேரில் சந்தித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளரும் தற்போதைய அமைச்சருமான வன்னி அரசுவின் காலில் விழுந்து, இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும், வசிப்பதற்கு முறையான இருப்பிடம் இல்லாததால் தங்களைச் சிலர் மிகவும் கேவலமாகப் பேசி அவமதிப்பது குறித்தும் அந்தப் பெண் அமைச்சரிடம் கதறி அழுது முறையிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் திடீரெனத் தன் காலில் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் வன்னி அரசு, உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தி, “இதெல்லாம் செய்யக் கூடாது, உங்களது கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்று சமாதானப்படுத்தினார். மேலும், இருளர் சமூக மக்கள் அனைவருக்கும் முறையான வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு, அவர்கள் குடியிருக்கத் தேவையான நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கத் தவெக கூட்டணி அரசு சார்பில் அனைத்துத் துரித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in