CINEMA
ரொம்ப வருத்தமா இருக்கு.. விஜய்யை நாங்க ரொம்ப மிஸ் பண்றோம்.. உண்மையை உடைத்த நடிகை திரிஷாவின் தாயார்…!!
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகமெங்கும் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இத்திரைப்படம் குறித்து நடிகை த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். திரையரங்கில் படத்தைப்பார்த்து ரசித்த அவர், படம் தங்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமான ஒரு தருணமாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஒரு மைல்கல் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கடைசிப் படம் இது என்பதால் தங்களுக்கு மிகுந்த வருத்தமாக இருப்பதாக உமா கிருஷ்ணன் கூறியுள்ளார். திரைத்துறையில் அவரது நடிப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பைச் சுட்டிக்காட்டிய அவர், “நிச்சயமாக அவரை வெள்ளித்திரையில் மிஸ் செய்யப் போகிறோம்” என உருக்கமாகப் பேசியுள்ளார்.
