CINEMA
“திரைக்கு முன்னாடி முள்வேலியா..?!” அறந்தாங்கி தியேட்டரில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு வந்த ரசிகர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில், புதிதாக வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்கள் திரைக்கு முன்பாக முள்வேலி (பேரிகேட்) அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாகத் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில் ரசிகர்கள் திரைக்கு அருகில் சென்று ஆரவாரம் செய்து கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்தத் திரையரங்கில் திரையின் முன்பகுதி முழுவதும் முள்வேலி கொண்டு அடைக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களால் வழக்கம்போலக் கொண்டாட முடியவில்லை.
திரையரங்க நிர்வாகத்தின் இந்தத் திடீர் நடவடிக்கைக்கான காரணம் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் திரையரங்கின் முக்கிய சொத்துக்களைச் சேதமடையாமல் பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே இந்தத் தற்காலிக முள்வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், தியேட்டர் திரையின் முன் முள்வேலி அமைக்கப்பட்ட விவகாரம் தற்போது அறந்தாங்கி மற்றும் சமூக வலைத்தளங்களில் உள்ள திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாகவும், பரபரப்பாகவும் மாறியுள்ளது.
