CINEMA
“ஜனநாயகன் படத்துக்காக இரண்டு தடவை அழுதேன்..! விஜய் கொடுத்த அந்த ஒற்றை வார்த்தை… உண்மைகளை உடைத்த இயக்குநர் ஹெச். வினோத்..!!”
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளின் ஒரு பகுதியாக, அதன் இயக்குநர் ஹெச். வினோத் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அப்பேட்டியில், படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு காலகட்டத்தில் தான் சந்தித்த கடுமையான மன அழுத்தம் குறித்தும், அந்தச் சமயத்தில் தான் இரண்டு முறை அழுதது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாக முடியாமல் தாமதமான போது முதன்முறையாகத் தான் மிகவும் மனவேதனை அடைந்து அழுததாக ஹெச். வினோத் தெரிவித்துள்ளார். மேலும், படம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் கசிந்ததாகத் தகவல்கள் வெளியானபோது இரண்டாவது முறையாக மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறியுள்ளார். தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம், வெளியீட்டுத் தேதி மாற்றம் போன்ற பல்வேறு சவால்களை இக்காலக்கட்டத்தில் படக்குழு எதிர்கொண்டது.
இந்தக் கடினமானச் சூழலில் நடிகர் விஜய் தனக்கு ஆதரவாக நின்று ஆறுதல் அளித்ததாக இயக்குநர் நினைவுகூர்ந்துள்ளார். “இப்படிப்பட்ட விஷயங்கள் நடப்பது இயல்புதான், கவலைப்பட வேண்டாம்; மனம் கஷ்டமாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்” என்று விஜய் தன்னிடம் கூறியதாக ஹெச். வினோத் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த பேட்டி தற்போது இணையதளங்களில் ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.
