“உன் கூடவே வருவேன் மச்சான்”.. டெங்கு காய்ச்சலால் தோழன் பலி… செய்தியை கேட்ட நண்பனுக்கு நேர்ந்த விபரீதம்.. கலங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“உன் கூடவே வருவேன் மச்சான்”.. டெங்கு காய்ச்சலால் தோழன் பலி… செய்தியை கேட்ட நண்பனுக்கு நேர்ந்த விபரீதம்.. கலங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

நட்பின் ஆழத்தையும், பிரிவின் துயரத்தையும் விவரிக்கும் நெஞ்சை பதறவைக்கும் நிகழ்வு சென்னை எண்ணூரில் அரங்கேறியுள்ளது. எண்ணூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற மீனவர் கடுமையான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த அவரது உயிர் நண்பர் ஏகாம்பரம் கரைக்குத் திரும்பியபோதுதான், இந்த இடி போன்ற செய்தி அவருக்குத் தெரியவந்தது. நண்பன் இனி இல்லை என்பதைத் தாங்கிக் கொள்ள முடியாத அவர், கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளானார்.

தங்கள் நீண்டகால நட்பின் நினைவுகளை ஏந்தியபடி, தனது செல்போனில் இருந்த பிரகாஷின் புகைப்படத்தைப் பார்த்தவாறே ஏகாம்பரம் விம்மியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே, அதிர்ச்சியினால் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் படகின் இருக்கையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். ஒரே நேரத்தில் இரு சிறந்த நண்பர்களை இழந்து தவிக்கும் எண்ணூர் பகுதி மீனவ மக்கள், உயிரோடு இருந்தபோது மட்டுமல்ல, சாாவிலும் இவர்கள் பிரியவில்லை எனப் பெரும் நெகிழ்ச்சியோடும், ஆறாத் துயரத்தோடும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in