LATEST NEWS
BREAKING:” ஜனநாயகத்திற்கு எதிரானது” ராகுல் காந்தி கைதுக்கு முதல்வர் விஜய் கண்டனம்..!!
டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்துப் போராடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். முன்னதாக ராகுல் காந்தியின் கைது விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மவுனம் காப்பதாகக் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்தத் துரித விர்வினையை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், “நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது” என்று சாடியுள்ளார். மேலும், அமைதியான முறையில் போராடிய தலைவர்கள் மீதான ஒன்றிய அரசின் இத்தகைய அடக்குமுறை செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
