மனுஷங்களாடா நீங்க..?! மதுபோதையில் நண்பனையே பலி தீர்த்த கொடூர அரக்கர்கள்.. பிணத்துடன் செல்ஃபி எடுத்த கொடூரம்… கோவையில் நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

மனுஷங்களாடா நீங்க..?! மதுபோதையில் நண்பனையே பலி தீர்த்த கொடூர அரக்கர்கள்.. பிணத்துடன் செல்ஃபி எடுத்த கொடூரம்… கோவையில் நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

கோவை சிக்கலாம்பாளையத்தில் நள்ளிரவில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட மோதலில், அஸ்வின் என்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டும் சுத்தியலால் தாக்கப்ப்ட்டும் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்த நண்பனின் உடலோடு கொலையாளிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த மனசாட்சியற்ற செயல் அப்பகுதி மக்களை உறைந்துபோகச் செய்துள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அஸ்வின் தனது நண்பர்களான தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து தனியான இடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியுள்ளது.

இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற தினேஷும் மாதேஷும் கத்தியால் அஸ்வினின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியதுடன், சுத்தியலாலும் தலையில் கடுமையாகத் தாக்கியதில் அஸ்வின் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நண்பன் இறந்து கிடப்பதை உணர்ந்தும் எந்தவித பயமுமின்றி, அஸ்வினின் சடலத்திற்கு அருகே நின்று இருவரும் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு அங்கிருந்து தப்பியோடினர். தகவலறிந்து வந்த கோவை காவல்துறையினர் அஸ்வினின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிரத் தேடுதல் வேட்டைக்கு பின் தலைமறைவாக இருந்த தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களின் செல்போனைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in