“அண்ணா.. அந்த போனை எடுங்க..!” கடைக்காரரை அலைக்கழித்து பெண் செஞ்ச காரியத்தைப் பாருங்க.. CCTV-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“அண்ணா.. அந்த போனை எடுங்க..!” கடைக்காரரை அலைக்கழித்து பெண் செஞ்ச காரியத்தைப் பாருங்க.. CCTV-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

கடைக்காரரின் கவனத்தை மிகச் சாதுரியமாகத் திசைதிருப்பி, செல்போனைத் திருடிச் சென்ற இளம் பெண் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “அண்ணா.. அண்ணா.. அந்த போனை எடுங்க.. இல்ல இல்ல, இந்த போனை எடுங்க..!” என்று விதவிதமான மொபைல் போன்களைக் காட்டச் சொல்லி, கடைக்காரரை அங்குமிங்கும் அலைக்கழித்துள்ளார் அப்பெண். கடைக்காரர் கவனச்சிதறலுடன் வேறு போன்களை எடுத்துக் கொண்டிருக்கும் அந்தச் சில விநாடிகளுக்குள், மேஜை மீது இருந்த விலைமதிப்பற்ற செல்போனை யாருக்கும் தெரியாமல் அப்பெண் நைஸாகத் திருடிச் சென்றுள்ளார்.

அண்ணா.. அண்ணா.. அந்த மொபைல எடுங்க.. இல்ல இந்த மொபைல எடுங்க..!

கடைக்காரரை அழகாக திசைதிருப்பி செல்போனை திருடிய இளம்பெண்.. விழிப்புணர்வுக்காக வீடியோ வெளியிட்ட கடைக்காரர்..#Coimbatore | #MobileTheft | #CCTV | #Shop | #PolimerNews pic.twitter.com/opGX8WZnjB— Polimer News (@polimernews) August 4, 2026

சிறிது நேரத்திற்குப் பிறகே செல்போன் மாயமானதைக் கண்டறிந்த கடைக்காரர், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் அந்தப் பெண்ணின் தந்திரமான திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள கடைக்காரர், “வியாபாரிகள் அனைவரும் வாடிக்கையாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்” எனப் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், வீடியோவின் அடிப்படையில் அத்திருட்டுப் பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in