அடப்பாவி அதுக்காகவா..? 3 ஆண்டுகள் வாழ்ந்த தாயின் சடலத்தை Freezerக்குள் மறைத்து வைத்து.. சடலத்தோடு வாழ்ந்த மகன்… போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவி அதுக்காகவா..? 3 ஆண்டுகள் வாழ்ந்த தாயின் சடலத்தை Freezerக்குள் மறைத்து வைத்து.. சடலத்தோடு வாழ்ந்த மகன்… போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

Published

on

வேல்ஸ் நாட்டில் தனது தாயின் ஓய்வூதியம் மற்றும் அரசு சலுகைகளைப் பெறுவதற்காக, அவரது உடலை சுமார் 3 ஆண்டுகள் ப்ரீசருக்குள் மறைத்து வைத்த கிறிஸ்டோபர் பிலிப்ஸ் (60) என்ற நபருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. அவரது 89 வயதான தாய் சில்வியா பிலிப்ஸ் கடந்த 2023 மார்ச் மாதத்தில் உயிரிழந்தார். ஆனால், அவரது மரணத்தை அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மறைத்த கிறிஸ்டோபர், தாயின் உடல்நலக் குறைவிற்கான அரசு உதவித்தொகை, குளிர்கால எரிபொருள் சலுகை மற்றும் ஓய்வூதியம் என மொத்தம் 78,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ₹1 கோடி) வரை மோசடியாகப் பெற்றுள்ளார்.

நீண்ட நாட்களாக சில்வியாவை மருத்துவமனைப் பரிசோதனைக்கு அழைத்து வராததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் வரவேற்பறையில் இருந்த பெட்டி போன்ற ப்ரீசருக்குள் சில்வியாவின் உடல் சிறுத்தை புலி அச்சு போர்வையால் மூடப்பட்டு, ரோஜா இதழ்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்து அட்டையுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிறிஸ்டோபரின் வழக்கறிஞர் வாதிடுகையில், அவர் தனது தாயின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடுமையான துக்கத்தில் இருந்ததால் இவ்வாறு செய்ததாகக் குறிப்பிட்டார். இருப்பினும், நிதி ஆதாயத்திற்காக திட்டமிட்டு இந்த மோசடி அரங்கேற்றப்பட்டதாகக் கூறி நீதிமன்றம் தண்டனை வழங்கியதோடு, சில்வியாவின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in