LATEST NEWS
கொய்யாப்பழத்தை எதிர்பார்த்து வந்தோம்.. ஆனால் கோவைப்பழமே கிடைச்சிருக்கு.. தமிமுன் அன்சாரி அதிரடி விமர்சனம்…!!
தமிழக அரசின் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பழமொழியைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்று குறிப்பிட்ட அவர், “கொய்யாப்பழத்தை எதிர்பார்த்து வந்தோம்.. ஆனால் கோவைப்பழமே கிடைத்துள்ளது” என ஒப்பிட்டுத் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் விளிம்பு நிலை மக்கள், சிறுபான்மையினர் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்கான பெரிய அளவிலான புதிய அறிவிப்புகளோ அல்லது வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களோ இடம்பெறவில்லை என்பதே இவரது இந்த விமர்சனத்தின் பின்னணியாகும். அரசு பெரும் அறிவிப்புகளை வெளியிடும் என்ற ஆவலோடு காத்திருந்த தங்களுக்கு, இந்த பட்ஜெட் மிகவும் சுமாரான அளவிலேயே பலன்களைக் கொடுத்துள்ளதாக மஜக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
