LATEST NEWS
கூவத்தில் இனி குழந்தைகள் குளிக்கலாம்… சிங்கப்பூர், சியோல் போல மாறும் சென்னை… தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு..!!
சென்னையின் அடையாளங்களாக விளங்கும் கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் படகு சவாரி செய்யவும், குழந்தைகள் ஆனந்தக் குளியல் போடவும் தகுந்தவாறு மாற்றப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் உறுதி அளித்துள்ளது. தென் கொரியாவின் சியோல் நகரத்தில் உள்ள செஞ்சியான் நதி மற்றும் சிங்கப்பூரின் கலாங் நதி போன்ற சர்வதேசத் தரத்திற்கு இணையாக இந்த ஆறுகள் புனரமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பிரம்மாண்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு, நதிகளை மீட்டெடுக்கும் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது மாசடைந்து காணப்படும் கூவம் மற்றும் அடையாறு நதிக்கரைகளை அழகுபடுத்தி, நீர்நிலைகளைச் சுத்திகரிக்க ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகரத்தின் அழகை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம், எதிர்காலத்தில் சென்னையின் மிக முக்கியப் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களாக இந்த நதிகளை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
