“ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் இத்தனை லட்சம் கடனா..?!” தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியான மாபெரும் அதிர்ச்சி… உறைந்துபோன பொதுமக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் இத்தனை லட்சம் கடனா..?!” தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியான மாபெரும் அதிர்ச்சி… உறைந்துபோன பொதுமக்கள்..!!

Published

on

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நடப்பு பட்ஜெட்டில், மாநிலத்தின் மொத்தக் கடன் நிலுவை ரூ.10.98 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் 2.28 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த மொத்தக் கடனை குடும்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால், தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் தோராயமாக ரூ.4.80 லட்சம் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ள நிலை உருவாகியுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் ரூ.5.13 லட்சம் கோடியாக இருந்த மாநிலத்தின் கடன் அளவு, தற்போது இரு மடங்காக உயர்ந்து மாபெரும் பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளது. இதோடு மட்டுமன்றி, நடப்பு நிதியாண்டிலும் மேலும் ரூ.1.73 லட்சம் கோடி அளவுக்குப் புதிதாகக் கடன் பெற மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலத்தின் கடன் அளவு தொடர்ந்து தையல் மீறி அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in