“செம்ம ஆக்டிங் பா ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் .!” வலிப்பு நாடகமாடி பணத்தை சுருட்டிய கில்லாடி பாட்டி.. ஆனா கடைசியில மாட்டிக்கிட்டாரே… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“செம்ம ஆக்டிங் பா ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் .!” வலிப்பு நாடகமாடி பணத்தை சுருட்டிய கில்லாடி பாட்டி.. ஆனா கடைசியில மாட்டிக்கிட்டாரே… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரத்தினபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், முதியவர் ஒருவர் விசித்திரமான முறையில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். மக்கள் கூடும் இடங்களில் செல்லும்போது, திடீரென தரையில் விழுந்து கடுமையான வலிப்பு ஏற்பட்டது போல் கைகால்களை உதறி நடித்து நாடகமாடியுள்ளார். இதை உண்மையென நம்பிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக ஓடிவந்து முதலுதவி செய்த தோடு, மருத்துவச் செலவிற்காகப் பரிதாபப்பட்டுத் தங்களால் இயன்ற பணத்தையும் கொடுத்து உதவியுள்ளனர்.

ஆனால், அந்தப் பாட்டி இதே பாணியைப் பயன்படுத்தி வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து நாடகமாடிப் பணம் பறிப்பதைச் சிலர் கூர்ந்து கவனித்துள்ளனர். திரைப்படப் பாணியில் மக்களை ஏமாற்றி வந்த இவரது உண்மை முகத்தை வெளிக்கொண்டு வரும் வகையில், அவர் வலிப்பு வருவது போல் நடிக்கும் காட்சிகளைப் பொதுமக்கள் தங்களது மொபைல் போனில் ரகசியமாகப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்தப் பாட்டியின் “ஆக்டிங்” வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறித்த அந்த மர்மப் பாட்டி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இருப்பினும், வைரலான வீடியோ ஆதாரங்களை வைத்து உள்ளூர் காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சாலையில் யாராவது ஆபத்தில் இருந்தால் உதவுவது நல்லெண்ணமே என்றாலும், மனிதாபிமானத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இதுபோன்ற மோசடிப் பேர்வழிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in