CRIME
“என்னவொரு கொடுமை இது..! வீட்டில் மயங்கி விழுந்த 10 ஆம் வகுப்பு மாணவி… மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி.. இன்ஸ்டாகிராம் காதலால் வந்த பேராபத்து.. திடுக்கிடும் பின்னணி..!!”
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய அம்மாணவி திடீரென மயங்கி விழுந்ததால், அவரை மீட்ட பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்த தகவலைக் கேட்டுப் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்துச் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் எதிர்பாராதவிதமாகக் கீழே தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்குக் குறைப்பிரசவம் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது. விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான விஸ்வமணி என்ற வாலிபரின் காப்பற்ற வார்த்தைகளை நம்பி மாணவி ஏமாந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள இன்ஸ்டாகிராம் காதலன் விஸ்வமணியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
