CINEMA
“ஐயோ என்னாச்சு!.. இரவு முழுவதும் தேம்பி தேம்பி அழுத விஜய்.. தளபதியின் ‘அந்த’ ரகசியத்தை போட்டுடைத்த சஞ்சீவ்”..!!
தளபதி விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகராக இது அவரது இறுதிப் படம் என்பதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளதுடன், அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. இந்நிலையில், விஜய்யின் ஆரம்பகால சினிமா பயணம் குறித்த தகவல்கள் மீண்டும் வைரலாகி வருகின்றன.
தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் அளித்த பழைய பேட்டி ஒன்றில், விஜய்யின் முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தபோது அவர் அடைந்த மனவேதனை குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். வெறும் 20 வயதில் கடுமையான விமர்சனங்களால் அந்த முழு இரவும் விஜய் அழுதுவிட்டதாகவும், கடின உழைப்பால் மட்டுமே அவர் இன்று இந்த உச்சத்தை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு பிரியாவிடை கொடுக்கவுள்ள விஜய்க்கு, அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
