LATEST NEWS
முதல்வர் விஜய் உயிரோடு இருக்க மாட்டார்…. ஆர்.பி உதயகுமார் விடுத்த கொலை மிரட்டல்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்துப் பேசிய கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன. காவிரி விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் ஒன்றில் ஆவேசமாகப் பேசிய ஆர்.பி. உதயகுமார், அதிமுகவை அழிக்கவோ அல்லது அபகரிக்கவோ நினைத்தால் விஜய் உயிரோடு இருக்க மாட்டார். தாங்கள் தற்கொலை படையாக மாறவும் தயங்க மாட்டோம் எனக் கூறி முதலமைச்சருக்கு மறைமுகக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
முன்னதாக, தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.பி. உதயகுமார், தமிழக அரசில் சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியப் பதவிகள் வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். அப்போது, “முதலமைச்சர் விஜய்யின் தோழியான நடிகை த்ரிஷா எப்போது துணை முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று தமிழக மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று கிண்டலாகப் பேசினார். இவரது இந்தத் தரக்குறைவான பேச்சுக்கு த்ரிஷாவின் ரசிகர்களும், தமிழக மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
ஆர்.பி. உதயகுமாரின் இந்த அவதூறான மற்றும் அச்சுறுத்தும் பேச்சுக்கு எதிராக, தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் த்ரிஷா ரசிகர் மன்றத்தினர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர். முதலமைச்சர் விஜய் மற்றும் பெண் என்றும் பாராமல் நடிகை த்ரிஷாவை அவமதிக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
