CINEMA
“அப்பா ஏன் எப்பவும் அடி வாங்கிட்டே இருக்கீங்க..?” சிறுவயதில் செந்திலிடம் மகன் கேட்ட கேள்வி… பல வருட ரகசியத்தை உடைத்த மகன்… உறைந்துபோக வைக்கும் பின்னணி..!!
பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலின் மகன் மணிகண்டன் பிரபு, தனது தந்தை குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்காக திரையுலகில் சந்தித்த துயரமான நினைவுகளை பேட்டி ஒன்றில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். சிறுவயதில் தன் தந்தையிடம், “நீங்கள் ஏன் எப்போதும் மற்றவர்களிடம் அடிவாங்கும் கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறீர்கள்? உங்களால் திருப்பி அடிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க முடியாதா?” என்று அவர் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த நடிகர் செந்தில், “இயக்குநரின் கற்பனையை மாற்றுமாறு அவர்களிடம் நாம் சொன்னால், அவர்கள் நம்மையே படத்திலிருந்து மாற்றி வேறு ஒருவரைப் போட்டு விடுவார்கள்; அதனால் குடும்பத்திற்காக அனைத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும்” என்று உருக்கமாகக் கூறியதாக மணிகண்டன் பிரபு நினைவுகூர்ந்துள்ளார். திரையில் அனைவரையும் சிரிக்க வைத்த ஒரு மாபெரும் கலைஞனின் பின்னணியில் இருந்த இத்தகைய தியாகமும் உழைப்பும் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
