DISTRICT NEWS
சிவகாசியில் கோர சம்பவம்..! 4 பேர் பலி.. களத்தில் இறங்கி 11 பேரை அதிரடியாக தூக்கிய காவல்துறை.. பரபரப்பு பின்னணி..!!
சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில், சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இந்த விபத்தில் தொழிலாளர்கள் ராம்பிரகாஷ், இன்னாசி முத்து மற்றும் அய்யப்பராஜ் ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சையில் இருந்த பாண்டித்துரை என்பவரும் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இதுவரை 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் அவற்றை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
