CINEMA
“கணவரின் நினைவோடு வாழும் நடிகை… மறுமணம் குறித்து உடைத்துப் பேசிய பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ருதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
நாதஸ்வரம், வாணி ராணி, பாரதி கண்ணம்மா எனப் பல ஹிட் சீரியல்கள் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை ஸ்ருதி சண்முகப் பிரியா. தனது காதலனும் பாடி பில்டருமான அரவிந்த் சேகரை கடந்த 2024-ஆம் ஆண்டு கரம்பிடித்தார். இவர்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், யாருமே எதிர்பாராத விதமாக சில மாதங்களிலேயே அரவிந்த் திடீரென காலமானார். இந்த செய்தி சின்னத்திரை உலகையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. கணவரை இழந்து தவிக்கும் ஸ்ருதி, அந்த சோகத்திலும் தன் காதலை நெஞ்சில் சுமந்து வாழ்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மறுமணம் குறித்துப் பேசிய ஸ்ருதி, தனியாக வாழ்வதா அல்லது மீண்டும் திருமணம் செய்துகொள்வதா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு என்றும், சமூகத்தின் கட்டுப்பாடுகள் தனது வாழ்க்கையைத் தீர்மானிக்காது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் தனது வாழ்க்கையில் வேறு ஒருவர் வந்தாலும், அவரைத் தனக்கு அனுப்பி வைப்பது தேவதையாக இருக்கும் தன் மறைந்த கணவர்தான் என்று அவர் கூறியிருப்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
