CINEMA
“உன் உடம்புல இருக்குற எல்லா மச்சத்தையும் பாக்கணும்” பிரபல நடிகர் அனுப்பிய பகீர் மெசேஜ்.. மேடையிலேயே உண்மையை உடைத்த ஜான்வி கபூர்..!!
‘உன் மச்சங்களை பார்க்க வேண்டும்’ என்று பாலிவுட் முன்னணி நடிகர் ஒருவர் தனக்கு அனுப்பிய ரகசிய குறுஞ்செய்தியை நடிகை ஜான்வி கபூர் வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளார். பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் தனது சகோதரி குஷி கபூருடன் ஜான்வி கலந்து கொண்ட போது இந்த சுவாரசியமான தகவல் வெளியானது.
நிகழ்ச்சியின் ‘ரேபிட் பயர்’ சுற்றின் போது, இதுவரை உங்களுக்கு வந்ததிலேயே மிகவும் வழிசலான மெசேஜ் எது என்று கரண் ஜோஹர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஜான்வி, பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தனக்கு மெசேஜ் அனுப்பி, “உன் உடலில் இருக்கும் எல்லா மச்சங்களையும் நான் பார்க்கலாமா?” என்று கேட்டதாகக் கூறி அரங்கத்தையே அதிர வைத்தார். தொடர்ந்து கரண் ஜோஹர் “உனக்கு அவ்வளவு மச்சங்களா இருக்கின்றன?” என வேடிக்கையாகக் கேட்க, “ஆமாம், எனக்கு நிறையவே இருக்கின்றன” என்று ஜான்வி கபூர் வெட்கத்துடன் பதிலளித்தார்.
இருப்பினும், தன்னிடம் அப்படி வம்பிழுத்த அந்த பாலிவுட் நடிகர் யார் என்ற பெயரை ஜான்வி கபூர் இறுதிவரை வெளியிடவில்லை. இதனால், ஜான்வி கபூருக்கு இப்படியொரு குறுஞ்செய்தியை அனுப்பி குறும்பு செய்த அந்த முன்னணி நடிகர் யாராக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தற்போது தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
