“இது உண்மையிலேயே இருக்குதா..?! விண்டோஸ் வால்பேப்பரை நேரில் கண்டு வியந்த பெண் வ்லாகர்..! மைக்ரோசாப்ட் லேப்டாப்பில் இருக்கும் அந்த ஃபேமஸ் கடற்கரை எங்கே இருக்கு தெரியுமா..?!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது உண்மையிலேயே இருக்குதா..?! விண்டோஸ் வால்பேப்பரை நேரில் கண்டு வியந்த பெண் வ்லாகர்..! மைக்ரோசாப்ட் லேப்டாப்பில் இருக்கும் அந்த ஃபேமஸ் கடற்கரை எங்கே இருக்கு தெரியுமா..?!”

Published

on

சமீபத்தில் ‘சாகர் மற்றும் ஆமி’ என்ற இந்தியப் பயண பெண் பிளாகர்கள், நியூஸிலாந்தின் கோல்டன் பே பகுதியில் அமைந்துள்ள வராரிகி கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள குகையின் உள்ளே இருந்து பார்த்தபோது தெரித்த அலைகளும் கடல் பாறைகளும், தங்களது விண்டோஸ் லேப்டாப்பில் இருந்த வால்பேப்பரை அச்சுபிசகாமல் அப்படியே ஒத்திருப்பதைக் கண்டு வியப்படைந்தனர். லேப்டாப் திரையில் உள்ள படத்தையும், எதிரே இருக்கும் நிஜக் காட்சியையும் ஒப்பிட்டு அவர்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகப் பரவி வருகிறது.

பலரும் இந்த வால்பேப்பர் காட்சி கணிப்பொறியில் எடிட் செய்யப்பட்ட செயற்கைப் படம் என்றே நினைத்துக் கொண்டிருந்த வேளையில், கடல் பாறைகள், மணல் மேடுகள் மற்றும் அழகிய குகைகளுடன் கூடிய இந்த இயற்கை எழில் கொஞ்சும் இடம் உண்மையில் இருப்பதை இக்காணொளி உறுதி செய்துள்ளது. இந்த விடியோவைக் கண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்கே, “இந்தக் காட்சி நேரில் பார்க்கும்போது இன்னும் அழகாக இருக்கிறது” என்று வியந்து கருத்து பதிவிட்டுள்ளது.

Advertisement

https://www.instagram.com/reel/DbHifwNAneK/?utm_source=ig_web_button_share_sheet

இக்காணொளியைப் பகிர்ந்துள்ள அப்பயணிகள், இந்த இடத்தை நேரில் சென்று ரசிக்க விரும்புகிறவர்களுக்கு சில பயனுள்ள குறிப்புகளையும் வழங்கியுள்ளனர். அலைகளின் ஏற்ற இறக்கம் குறைவாக இருக்கும் ‘லோ டைட்’ சமயத்தில் சென்றால் மட்டுமே குகைகளுக்குள் பாதுகாப்பாகச் செல்ல முடியும் என்றும், வாகன நிறுத்துமிடத்தில் இருந்து சுமார் 20 நிமிடங்கள் நடந்து செல்ல வேண்டும் என்பதால் பலத்த காற்றில் இருந்து தப்பிக்க பொருத்தமான ஆடைகளை அணிந்து செல்லுமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in