குஷியோ குஷி…! வங்கிக் கணக்கில் ரூ.4,000.. CM விஜய் மகிழ்ச்சி செய்தி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குஷியோ குஷி…! வங்கிக் கணக்கில் ரூ.4,000.. CM விஜய் மகிழ்ச்சி செய்தி..!!

Published

on

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ₹4,000 வரை உயர்த்துவதற்கான முக்கியக் கோப்புகள் முதல்வர் விஜய்யின் ஒப்புதலுக்காக அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒட்டுமொத்த செலவினங்கள் மற்றும் அதற்கான நிதி ஆதாரங்கள் எங்குவிருந்து திரட்டப்படும் என்பது போன்ற அனைத்து முக்கிய விபரங்களும் அந்த கோப்பில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, இதுகுறித்த ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான அறிவிப்பை முதல்வர் விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப மிகக் குறைந்த அளவாக மாதத்திற்கு ₹200 முதல் ₹1,000 வரை மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், அரசின் புதிய திருத்தத்தின்படி உதவித்தொகை ₹4,000 ஆக உயர்த்தப்பட்டால், அது வேலை தேடி வரும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் ஊக்கமாகவும், பயனுள்ளதாகவும் அமையும் என அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in