LATEST NEWS
அடைகொடுமையே..! பிளாட்பார்ம் கூட இல்லாத இடத்துல ரயிலை நிறுத்திட்டாங்களே… ! அகமதாபாத் போக முடியாம நடுவழியில நின்ற வந்தே பாரத்… பயணிகள் புலம்பல்..!!
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராஜ்கோட்டிலிருந்து அகமதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், அகமதாபாத்திற்கு 40 கிலோமீட்டர் முன்பாக உள்ள விரோச்சன் நகர் என்ற இடத்தில் ரயில் பாதையிலேயே நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் 200 மி.மீ-க்கும் அதிகமாகத் தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயிலால் மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல முடியவில்லை. வழக்கமாக வந்தே பாரத் ரயில்கள் 100 மி.மீ வரை தண்ணீர் இருந்தால் மட்டுமே இயக்கப்படும் என்பதால் ரயில் சேவை நடுவழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த ரயிலில் பயணித்த நிகிதா சுமன் பாட்டீதர் என்ற பெண், பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி நடுவழியிலேயே நடந்து செல்லும் வீடியோவைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இனி எந்த ரயில்களும் முன்பக்கம் செல்லாது என்றும், ரயில் இங்கிருந்தே மீண்டும் திரும்பப் போகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் வேறு வழியின்றிப் பயணிகள் தங்களது உடமைகளைச் சுமந்துகொண்டு தண்டவாளங்களைக் கடந்து, சாலைப் பகுதிக்குச் சென்று வாடகை கார்களைப் பிடித்துத் தங்களது பயணத்தைத் தொடரும் நிலை ஏற்பட்டது.
https://www.instagram.com/reel/DbLAIiqNBQR/?utm_source=ig_web_button_share_sheet
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து இணையவாசிகள் பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பயணிகள் நடுவழியில் அவதிப்படுவதைத் தவிர்க்க, ரயிலைப் பாதுகாப்பாக ஏதேனும் ஒரு பிளாட்ஃபார்ம் உள்ள ரயில் நிலையத்தில் நிறுத்தியிருக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அகமதாபாத்தில் நிலவும் மோசமான மழை நிலவரத்தைக் கண்டு இணையவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
