CINEMA
நாங்க இந்த நிலையில் இருக்க காரணம் யார் தெரியுமா….? ஜான்வி கபூர் உருக்கம்…!!
இயக்குநர் கொரட்டல சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஜான்வி கபூர், தமிழிலிருந்து கலையரசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் சென்னையில் தேவார படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.
என் அம்மாவுடன் நான் இருந்த சிறந்த தருணங்கள் அனைத்தும் சென்னையில் தான். நீங்கள் காட்டிய அன்பு தான் நாங்கள் இப்போது இந்த நிலையில் இருக்க காரணம். இதற்கு நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருப்பேன். என் அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று உருக்கமாக பேசி உள்ளார்.