CINEMA
பெரும் சோகம்…! பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா மாரடைப்பால் மரணம்….!!!
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா குடும்பத்தோடு பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 85 .
இவருடைய இறுதி சடங்கு இன்று மாலை பெங்களூரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1960 ஆம் வருடம் கைது கண்ணாயிரம் என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 1970 ஆம் வருடம் வெளியான சிஐடி சங்கர் என்ற படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது .அப்போது முதல் தான் இவர் சிஐடி சகுந்தலா என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.