பழம்பெரும் நடிகை ஜமுனா திடீர் மரணம்…. திரையுலகினர் இரங்கல்…. சோகம்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பழம்பெரும் நடிகை ஜமுனா திடீர் மரணம்…. திரையுலகினர் இரங்கல்…. சோகம்….!!!!

Published

on

பழம்பெரும் நடிகையான ஜமுனா ஹைதராபாத்தில் உள்ள அவரின் இல்லத்தில் இன்று காலை காலமானார். இவருக்கு வயது 86. இவர் உடல்நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்த நிலையில் ஜமுனாவின் உடல் இன்று காலை 11 மணிக்கு பிலிம் சேம்பருக்கு கொண்டு செல்லப்படுகின்றது. 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி ஹம்பியில் பிறந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 1954 ஆம் ஆண்டு பணம் படுத்தும் பாடு என்ற படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். மேலும் தெனாலிராமன், நல்ல தீர்ப்பு,தூங்காதே தம்பி தூங்காதே மற்றும் மருதநாட்டு வீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in