LATEST NEWS
வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா…. வீடியோவை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக தீவிர சிகிச்சையும் எடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர் சமீபத்தில் தன்னுடைய உடல் நிலைக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பிய ஒரு வீடியோவில் நடக்கக்கூட முடியாத அளவிற்கு இருந்தார். இந்நிலையில் தற்போது சமந்தா பழையபடி உடற்பயிற்சி செய்து கடினமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
