#image_title

பிரபல இயக்குனரும் நடிகருமான டிபி கஜேந்திரன் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 68. பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்டா பல படங்களை இயக்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் இவர் பிரியமுடன், பிதாமகன், பேரழகன், வில்லு, வேலாயுதம், சந்திரமுகி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவரின் காமெடியை ரசிக்காத ஆட்களே இருக்க முடியாது என்று கூறலாம்.

1128663 untitled 1

அந்த அளவிற்கு தான் நடித்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில் இப்படி பல புகழுக்குரிய இவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.