LATEST NEWS
மாம்பழப் பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்…! இனி பயமில்லாம சாப்பிட இந்த ஒரு ட்ரிக் போதும்…!”அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து!” -இத்தனை நாளா நாம தப்பா நினைச்ச உண்மை.. மருத்துவர் உடைத்த ரகசியம்…!
கோடைகாலம் தொடங்கிவிட்டாலே பழங்களின் ராஜாவான மாம்பழத்தின் வரத்தும் அதிகரித்துவிடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் மாம்பழத்தில் வைட்டமின்கள் உட்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், “மாம்பழம் சாப்பிட்டால் உடம்பு சூடாகிவிடும்” என்ற பயம் பலரிடமும் உள்ளது. இது எந்தளவுக்கு உண்மை மற்றும் ஒரு நாளைக்கு எத்தனை மாம்பழம் சாப்பிடலாம் என்பது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் பிருந்தா எம்.எஸ் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
பாரம்பரிய மருத்துவ முறைகளின்படி, மாம்பழம் உடலில் வெப்பத்தை உண்டாக்கும் ஒரு பழமாகவே கருதப்படுகிறது. இதற்குக் காரணம், மாம்பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலின் மெட்டபாலிசத்தை (Metabolism) சற்று அதிகரிப்பதுதான். ஆனால், அளவாகச் சாப்பிடும்போது இது நம் உடலின் வெப்பநிலையை ஆபத்தான முறையில் நேரடியாக உயர்த்துவது இல்லை என்று மருத்துவர் கூறுகிறார்.
அதேநேரம், ஒரே நேரத்தில் அதிகப்படியான மாம்பழங்களைச் சாப்பிடும்போது முகப்பரு, வாய்ப்புண், செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.”மாம்பழத்தில் A, C, E, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள நீர்ச்சத்தும் இயற்கை எலக்ட்ரோலைடுகளும் கோடையில் உடலை நீரேற்றமாக (Hydrated) வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன.”
மாம்பழங்களைச் சாப்பிடுவதற்கு 20 முதல் 30 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடுவது நமது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. இது பழத்தின் இயற்கையான வெப்பத்தைக் குறைப்பதுடன், அதன் மேற்பரப்பில் இருக்கும் பசை அல்லது ரசாயன எச்சங்களை நீக்க உதவுகிறது. இதற்குப் பெரிய அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும், உணர்திறன் மிக்க உடலமைப்பு (Sensitive body) கொண்டவர்களுக்கு இது சௌகரியமான உணர்வைத் தரும்.
ஆரோக்கியமான நபர்கள் ஒரு நாளைக்கு ஒரு நடுத்தர அளவிலான (Medium size) மாம்பழத்தை தாராளமாகச் சாப்பிடலாம். மாம்பழத்தில் இயற்கை சர்க்கரை அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் தங்களின் ரத்த சர்க்கரை அளவைப் பொறுத்து மருத்துவரின் ஆலோசனையோடு குறைவான அளவில் சாப்பிட வேண்டும். மாம்பழத்தால் உடல் சூடாவதைத் தவிர்க்க, அதைத் தயிருடன் சேர்த்து ‘மேங்கோ லஸ்ஸி’ அல்லது மாம்பழ பச்சடியாகச் சாப்பிடலாம்; அல்லது மாம்பழம் சாப்பிட்ட பிறகு போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். எனவே, பயப்படாமல் அளவோடு மாம்பழத்தை ருசித்து மகிழலாம்!
