LATEST NEWS
தொடர்ந்து 45 நாட்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? அடேங்கப்பா இத்தனை நன்மைகள் இருப்பது இத்தனை நாளா நமக்கு தெரியலையே?
எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடியது வாழைப்பழம். தினமும் ஒரு வாழைப்பழம் என தொடர்ந்து 45 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் பல நன்மையான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
சீரான ரத்த அழுத்தம் – வாழைப்பழத்தின் மூலம் கிடைக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான வரம்பில் பாராமரிக்க உதவுகிறது. மேலும் தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டை சீராக்குவதோடு உடலின் நீர்சத்தை சமநிலையில் பராமரிப்பு உதவுகிறது.
மேம்பட்ட செரிமானம் – வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை குறைக்க உதவும். மேலும் குடல் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியத்தை ஆதரித்து ஒட்டுமொத்த செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியம் மேம்படும் – இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் தமனிகளில் கொழுப்பு படிவதை தடுத்து இதயம் சீராக இயங்க உதவுகிறது. பொட்டாசியம் தாது இதய தசைகளை சுருங்கி விரியும் தன்மையை சீராக வைப்பதன் மூலம் இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.
வாழைப்பழத்தில் நிறைய நன்மைகள் இருந்தாலும் ஏற்கனவே அதிக கலோரி உணவுகளை உண்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடும் போது அதன் கூடுதல் கலோரியாக மாறி உடல் எடையை அதிகரிக்க கூடும். மேலும் தீவிர சிறுநீரக குறைபாடுள்ள நோயாளிகளுக்கு பொட்டாசியத்தை வெளியேற்றும் திறன் குறைவாக இருக்கும். அதனால் உடலில் பொட்டாசியம் அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் அவர்கள் பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழங்களை தவிர்ப்பது நல்லது.
