“இதை சாப்பிட்டா நினைச்சது நடக்கும்..!” மந்திரித்த வாழைப்பழத்தை ரூ.2500 வாங்கிய வாலிபர்.. தோலை உரிச்சப்போது காத்திருந்த ட்விஸ்ட்.. வைரலாகும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதை சாப்பிட்டா நினைச்சது நடக்கும்..!” மந்திரித்த வாழைப்பழத்தை ரூ.2500 வாங்கிய வாலிபர்.. தோலை உரிச்சப்போது காத்திருந்த ட்விஸ்ட்.. வைரலாகும் சம்பவம்..!!

Published

on

விரும்பியது நடக்கும் எனக் கூறி மந்திரித்த வாழைப்பழம் ரூ.2,500-க்கு ஏலம் விடப்பட்ட வினோத சம்பவம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொடைக்கல் பகுதியில் நடந்துள்ளது. அங்கு தன்னை ‘அபு அலவி மஜ்லி சில்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர், இந்த வாழைப்பழத்தைச் சாப்பிட்டால் நினைத்தது நடக்கும் என்று கூறி ஏலத்தைத் தொடங்கினார். ரூ.1,000-ல் தொடங்கிய இந்த ஏலத்தில், ஒரு வாலிபர் அந்த ஒற்றை வாழைப்பழத்தை ரூ.2,500-க்கு ஏலம் எடுத்தார். மேடையில் இருந்த நபர் கூறியபடி, அந்த வாலிபர் பழத்தின் தோலை உரித்தபோது உள்ளே பழம் ஏற்கனவே துண்டுகளாக வெட்டப்பட்டிருந்தது. இதனை நம்பி அந்த வாலிபரும் அதைச் சாப்பிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தற்போது சந்தையில் ஒரு கிலோ நேந்திரன் வாழைப்பழம் ரூ.100-க்கு விற்கும் நிலையில், ஒரு பழம் ரூ.2,500-க்கு ஏலம் போனது பெரும் பேசுபொருளானது. மந்திரித்த பழம் என்ற பெயரில் அபு அலவி மஜ்லிசில் மக்களை ஏமாற்றுவதாகக் கூறி, ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் அவர் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்தத் தாக்குதல் மற்றும் ஏமாற்றுச் சம்பவம் குறித்து தற்பொழுது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in