LATEST NEWS
“ஐ அம் சாரி சார்-னு சொன்னீங்களே தம்பி விஜய்..மறந்துட்டீங்களா..?!” ரகசிய சந்திப்பை உடைத்து ஸ்டாலின்.. கோட்டையில் பரபரப்பு..!!
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் காட்டிய சைகைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ அறிக்கை அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதப் புயலை வெடிக்கச் செய்துள்ளது. அதில் அவசரநிலை காலத்தில் மிசா சட்டத்தின்கீழ் தான் அடைந்த கொடூரமான சிறை சித்திரவதைகளை மு.க.ஸ்டாலின் அதில் அக்குவேறு ஆணிவேறாக விவரித்துள்ளார். சிறையில் காவலர்கள் பூட்ஸ் காலால் மிதித்து, லத்தியால் கொடூரமாகத் தாக்கியதில் தனது தாடை எலும்பு உடைந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், “தம்பி விஜய், நீங்க கை வச்சு தாடையைக் காண்பித்தது சரிதான், நான் அடி வாங்கிய தழும்புகள் இன்றைக்கும் என்னிடம் உள்ளன” என அனல் பறக்கப் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், தன்னை நேரில் சந்தித்தபோது தேர்தல் பரப்புரை விமர்சனங்களுக்காக “I am sorry சார்” என்று விஜய் மன்னிப்பு கேட்டதை நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின், ஒரு முதலமைச்சருக்கான கண்ணியத்துடனும் பொறுப்புடனும் வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அமலாக்கத்துறை கடிதத்தை வைத்துப் பழிவாங்கும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறுவதைத் தவிர்த்து, சட்டமன்றத்தை ‘ரீல்ஸ் மன்றமாக’ மாற்றாமல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான விவாதங்களைச் செய்யுமாறு முதலமைச்சர் விஜய்யை அவர் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார். பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாதது மற்றும் சிலிண்டர், உரிமைத்தொகை போன்ற தேர்தல் வாக்குறுதிகளில் தவெக அரசு அந்தர்பல்டி அடித்துள்ளதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
