வாயில் துணியை திணித்து கொடூரம்…! 14 வயது மகளை அந்த கோலத்தில் கண்டு கதறிய தந்தை… மரக்கட்டையால் தாக்கி சீரழித்த மாணவர்கள்…. பகீர் சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வாயில் துணியை திணித்து கொடூரம்…! 14 வயது மகளை அந்த கோலத்தில் கண்டு கதறிய தந்தை… மரக்கட்டையால் தாக்கி சீரழித்த மாணவர்கள்…. பகீர் சம்பவம்…!!

Published

on

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகேயுள்ள வயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட காரைத்திட்டு கிராமத்தில், 14 வயது மதிக்கத்தக்க ஏழாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் (20) மற்றும் அவரது நண்பரான அஜய் (27) ஆகிய இருவரும் சேர்ந்து, அந்த சிறுமியை மிரட்டி வாயில் துணியை திணித்து வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றுள்ளனர். மகேஸ்வரன் வீட்டு மொட்டை மாடிக்குக் கடத்திச் செல்லப்பட்ட அந்த சிறுமியை இருவரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, தங்களை எதிர்த்துப் போராடிய அச்சிறுமியை மரக்கட்டையால் தலையில் கொடூரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

வெளியே சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் தேடிச் சென்ற தந்தை, அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் குறிப்பிட்ட அந்த மொட்டை மாடிக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு மகள் மயங்கிய நிலையில் ரத்தக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காரைத்திட்டு பகுதியில் பதுங்கியிருந்த பாலிடெக்னிக் இறுதி ஆண்டு மாணவர் மகேஸ்வரன் மற்றும் இறால் பண்ணை தொழிலாளி அஜய் ஆகிய இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in