LATEST NEWS
“அந்த சார்…. எங்களை…” பள்ளியில் நடந்த அசிங்கம்…! சிங்கப்பெண் போலீசாரிடம் கதறிய மாணவிகள்…. கம்பி எண்ணும் தற்காலிக ஆசிரியர்…. பகீர் சம்பவம்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். சமீபத்தில் இப்பள்ளிக்குச் சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அப்போது, அங்கு ஒன்பதாம் வகுப்பு பயிலும் சில மாணவிகள், தங்களுக்குப் பள்ளியில் தற்காலிக கணினி ஆசிரியராகப் பணிபுரியும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சுரேஷ் (42) என்பவர் தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்து வந்ததாகக் கூறி அதிர்ச்சியூட்டும் புகாரை அளித்தனர்.
மாணவிகளின் இந்த முறையீட்டைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் கரியாலூர் போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆசிரியர் சுரேஷ் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விடுதி காப்பாளர் கிருத்திகா அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், கரியாலூர் காவல்துறையினர் ஆசிரியர் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். கல்வி பயிலும் இடத்தில் மாணவிகளுக்கு நேர்ந்த இந்த அத்துமீறல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
