LATEST NEWS
“மசோதாவே என்னன்னு தெரியாம கூப்பிடுறீங்களே… இது நியாயமா..?” முதலமைச்சர் விஜய்க்கு ஆ. ராசா கேள்வி..!!
தொகுதி மறுவரையறை தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வர உள்ள நிலையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சர் விஜய் அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, “தொகுதி மறுவரையறை மசோதா என்னவென்றே தெரியாம கூப்பிடுகிறார்களே, நியாயமா இது. இது கேலிக்கூத்தாக இல்ல. சிறப்பாக இல்ல உங்களுக்கு” என்று விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாகக் கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையால் தமிழக எம்.பி. தொகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.
அதே நேரத்தில், த.வெ.க. ஆதரவு கட்சிகள் மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் 12 எம்.பி.க்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2 எம்.பி.க்கள், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளின் தலா 2 எம்.பி.க்கள் மற்றும் ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி. ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
