LATEST NEWS
நெல்லையில் பயங்கரம்..! “நீ அந்த சாதிக்காரன் தான” பள்ளியில் மாணவர் மீது தலைமை ஆசிரியர் சாதிய ரீதியிலான தாக்குதல் – ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவரை ரத்தக்காயம் வரும் வரை பிரம்பால் கடுமையாகத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தலைமை ஆசிரியர் தங்களைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், சாதியை குறிப்பிட்டு அசிங்கமாகத் திட்டியதாகவும் மாணவர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தவறிழைத்த தலைமை ஆசிரியர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
